கல்லுாரியில் புகைப்படம் போட்டி
திருவாடானை : திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டுநல பணி திட்டத்தின் சார்பில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படம் எடுக்கும் போட்டி நடந்தது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டி நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். புகைப்படங் களுக்கு அளிக்கப்படும் உயரிய விருது குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசபட்டது. நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மணிமேகலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.