மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
3 minutes ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
4 minutes ago
பள்ளத்தால் ஆபத்து ராமநாதபுரம் ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதை முறையாக மூடாததால் ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. ரயில் நிலைய நடை மேடையை முறையாக பராமரிக்க வேண்டும். -ராஜதுரை, ராமநாதபுரம். குண்டும் குழியுமான ராடு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மருத்துவமனை செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும். - கவிதா, ராமநாதபுரம். ஆபத்தான விளம்பர பலகை முதுகுளத்துார் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மின்கம்பத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்திற்கு முன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தி. அரிஹர பாண்டியன், கல்லுாரி மாணவர், முதுகுளத்துார். உடைந்து விழும் மின்கம்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூர் -கடலுார் பஸ் ஸ்டாப் அருகில் உடைந்து விழும் நிலையில் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும். -க.அமுதா, உப்பூர்.
3 minutes ago
4 minutes ago