மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
கமுதி : கமுதி அருகே கோட்டை மேடு தனி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது.மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயகுமார், கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.,ராஜன் முன்னிலை வகித்தனர். பயிற்சி மையத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் என 40 பேர் பயிற்சி பெற்றனர். 90 நாட்கள் நடந்த பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் போட்டித் தேர்வு எதிர் கொள்வதற்கான பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களுக்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படை வேலையில் சேர முன்னுரிமை வழங்கப்படும். உடன் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.