உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கணினி அறிவியல் துறை பயிற்சி பட்டறை

கணினி அறிவியல் துறை பயிற்சி பட்டறை

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் 'பைத்தான் மொழியை பயன்படுத்தி தரகு பகுப்பாய்வு' என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி பட்டறை நடந்தது.முதல்வர் பெ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர்கள் சசிதரணி, ஈஸ்வரி வரவேற்றனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் மாலதி பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து பேசினார். மதுரை ரெக்சார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய்ராஜ் பேசுகையில், கணினி அறிவியல் துறையில் மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை தெளிவு பட தெரிந்து கொண்டு எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும் என்றார்.பைத்தான் ஜூபிடர் கணினி மொழியில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.சி., பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.உதவி பேராசிரியர்கள் பிரியா, ஹபிசாபேகம் நன்றி கூறினர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி