மேலும் செய்திகள்
மழை பெய்யாததால் வீணாகும் விதைகள்
29-Sep-2025
திருவாடானை,; திருவாடானை பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்களில் நெற்பயிர்கள் முளைக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில் ஆடு, மாடுகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து செங்கமடை விவசாயிகள் கூறியதாவது: மழையை நம்பி விவசாயம் செய்கிறோம். பயிர்கள் தற்போது முளைக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் அவைகளை அவிழ்த்து விடுவதால் வயல்களுக்கு சென்று பயிரை சேதப்படுத்துகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விவசாய வருவாயைக் கொண்டு ஆண்டு முழுவதும் வாழ்வாதாரம் காக்க வேண்டிய நிலையில் கால்நடைகளால் இழப்பு ஏற்படுவதால் கவலையாக உள்ளது. ஆடு, மாடுகள் வளர்ப்போர் அறுவடை காலம் வரை தங்களது கட்டுபாட்டில் வளர்க்க வேண்டும். மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
29-Sep-2025