உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் தாளையடிகோட்டை கிராமத்தில் காரையா அய்யனார் கோயில் நுழைவு வாயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தன. நேற்று காலை யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகியது.காலை 10:00 மணிக்கு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, ஓய்வு வி.ஏ.ஓ., கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 10:00 மணிக்கு நாடகம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை