மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
திருப்புல்லாணி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சேதமடைந்த நிலையில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.தினைக்குளம் ஊராட்சியில் ராணி மங்கம்மாள் சாலையில் 2001ல் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.9.50 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடக்கிறது.இதே போல் வண்ணாங்குண்டு பஸ் ஸ்டாப் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இடிந்தது. பொதுமக்கள் செல்லாதவாறு சுற்றிலும் கயறு கட்டியிருந்தனர்.இது குறித்தும் தினமலர் நாளிதழில் செய்தி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக அந்த கட்டடம் அகற்றப்பட்டு ரூ.9.50 லட்சத்தில் கட்டுமான பணிகள் நடக்கிறது. செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago