உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரம் அருகே சமையல்காரர் கொலை: போதை ஆசாமிகள் ஓட்டம்

 ராமேஸ்வரம் அருகே சமையல்காரர் கொலை: போதை ஆசாமிகள் ஓட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சமையல் காரரை அடித்துக் கொலை செய்த போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பாம்பன் அன்னை நகரை சேர்ந்த அன்சாரி 65, சுபநிகழ்ச்சியில் உணவு சமைத்து கொடுக்கும் பணி செய்தார். இவரது வீட்டருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் குடிமகன்கள் போதையில் தகாத வார்த்தைகளால் பேசியும், அன்சாரி வீட்டருகே மது அருந்திவிட்டு காலி பாட்டிலை வீசியும் உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் சில போதை ஆசாமி கள் ஆத்திரத்தில் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டருகே உள்ள தென்னந்தோப்பில் அன்சாரி மது அருந்தி உள்ளார். அப்போது அங்கு வந்த போதை ஆசாமிகள் அன்சாரி தலையில் கட்டையால் தாக்கியும், காலால் உதைத்து அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதைக்கண்டித்து பாம்பன் போலீசாருடன் அன்சாரி உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். மதுபானக்கடைகள் மூடப்பட்டன. தப்பியோடியவர்களை போலீசார் தேடுகின்றனர். கடந்த 3 நாட்களில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் போதை ஆசாமிகளால் பள்ளி மாணவி, இலங்கை தமிழர், சமையல்காரர் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்டது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ