வறட்சியால் கருகும் பருத்தி செடிகள்
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, வரவணி, புல்லமடை, வல்லமடை, சிலுகவயல், ராமநாதமடை, சவேரியார் பட்டினம், இரட்டை ஊரணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டு மாதத்திற்கும் மேலாக மகசூல் கொடுத்து வருகின்றன.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சுட்டெரித்து வரும் வெப்பத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் பருத்திச் செடிகள் கருகி வருகின்றன. மகசூல் கொடுத்து வரும் நிலையில் பருத்தி செடிகள் கருகுவதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.