உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாய நிலங்களில் கழிவுநீர் அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

விவசாய நிலங்களில் கழிவுநீர் அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் விவசாய நிலங்களில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கூட்டத்திற்கு தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். அலுவலக உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார். பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. சேகர்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய 17 கடைகளுக்கு உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடைளை வழங்கி முறைகேடு நடந்துள்ளது. உரிய முறையில் ஏலம் விடப்பட வேண்டும். உம்முதர்ஹா: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கிறது. அகற்ற பல கூட்டங்களில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.தலைவர் ஷாஜகான்: கடைகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடக்கவில்லை. கழிவுநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ