உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  லாரி மீது டூவீலர் மோதி தம்பதி பலி

 லாரி மீது டூவீலர் மோதி தம்பதி பலி

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கிழவன் 45. இவர் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் மருந்து தெளிக்கும் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறார். இவர் மனைவி ஜோதிமுத்துவுடன் 38, கானாவிலக்கு பகுதியில் இருந்து டூவீலரில் கமுதி நோக்கி சென்றார். அப்போது மேலராமநதி அருகே பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக டூவீலர் மோதியதில் இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்து குறித்து கமுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ