மேலும் செய்திகள்
கால்வாயில் இறந்து கிடந்த வாட்ச்மேன்
14-Aug-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நம்பியான்வலசையைச் சேர்ந்த சேது மகன் முனியசாமி 40. இவர் போக்குவரத்து நகர் ரயில்வே பீடர் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன்கள் ராஜகுமாரன் 38, சுரேஷ்கண்ணன் 36, ஆகியோரது சொத்தை அடமானமாக பெற்றுக் கொண்டு ரூ.20 லட்சம் கடன் கொடுத்தார். கடனை இருவரும் திருப்பி செலுத்துவதற்காக தனித்தனியாக வங்கி காசோலைகளை வழங்கினர். அவற்றை முனியசாமி ராமநாதபுரம் வங்கியில் செலுத்திய போது போதிய பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது. இதுகுறித்து முனியசாமி ராமநாதபுரம் வழக்கறிஞர் சண்முகநாதன் மூலம் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் வழக்கு தொடர்ந்தார். இதில் கடந்த 2024 டிச.,27ல் ராஜகுமாரன், சுரேஷ்கண்ணனுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.7 லட்சத்து 44 ஆயிரம் இழப்பீடாக 2 மாதத்திற்குள் முனியசாமிக்கு வழங்கவும், தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் மாஜிஸ்திரேட் பிரபாகரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பிற்கு எதிராக ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜகுமாரன், சுரேஷ்கண்ணன் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். முனுசாமி தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் வாதிட்டார். ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மோகன்ராம் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்தார்.
14-Aug-2025