உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழாவில் தகுதியற்றவர்களுக்கு நற்சான்றிதழ்: கலெக்டரிடம் புகார்

விழாவில் தகுதியற்றவர்களுக்கு நற்சான்றிதழ்: கலெக்டரிடம் புகார்

ராமநாதபுரம்: குடியரசு தின விழாவில் கூட்டுறவுதுறை பணியாளர்களில் சிலதகுதியில்லாதவர்களுக்கு நற்சான்று வழங்கியுள்ளதாகதமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் கலெக்டர்சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புகார் தெரிவித்துள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது:குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்காலம் நடப்பில் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள சிலருக்கு அலுவலக நடைமுறைகளுக்கு முரணாக கலெக்டரிடம் நற்சான்று பெறுவதற்கு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம்மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்டத்தலைவரான விஜயராமலிங்கம், மாவட்ட செயலாளர்அப்துல் நஜ்முதீன், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்சங்க மாவட்ட நிர்வாகிகள் திருலோகசந்தர், வேல்முருகன்,மணிகண்டன், ஜெய்சங்கர், பாலாஜி ஆனந்த், சரத்குமார், பாரதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ