உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப்கள் சேதம்: கற்கள் காலில் குத்துவதால் காயமடைகின்றனர்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப்கள் சேதம்: கற்கள் காலில் குத்துவதால் காயமடைகின்றனர்

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடுகின்றனர். அக்னி தீர்த்த கடலில் பொதுவாக அனைவரும் நீராடுகின்றனர்.மேலும் அமாவாசை நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில்நீராடும் போது சேதமடைந்த சிமென்ட் சிலாப்புகள் காலில் பட்டு காயம் அடைகின்றனர். புனித நீராடும் ஆவலில் காலில் காயம் அடைவதால் வேதனை அடைகின்றனர்.அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும், தீர்த்த கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில் மூன்றாண்டுகளுக்கு முன்பு மத்திய சுற்றுலா நிதியில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் தீர்த்த கடற்கரை பகுதியில் சிமென்ட் சிலாப் அமைத்தது.இந்த சிலாப்புகள் அமைக்கப்பட்ட போதே பலத்த சூறாவளிக் காற்றின் போது வீசும் ராட்சத அலைக்கு இவை தாக்கு பிடிக்காது என ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் அதை கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில் கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிலாப்புகள் சேதமடைந்து தாறுமாறாக நொறுங்கி கிடக்கிறது. இதன் வழியாக பக்தர்கள் இறங்கி கடலில் புனித நீராட முடியவில்லை. மேலும் அமாவாசை, விடுமுறை நாளில் கூட்ட நெரிசலில் இவ்வழியாக நீராட செல்லும் பக்தர்கள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர்.எனவே சேதமடைந்துஉள்ள சிலாப்புகளை அகற்றி கடற்கரையை சீரமைத்து பக்தர்கள் பாதுகாப்புடன் அக்னி தீர்த்தத்தில் நீராட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை