உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப்பள்ளியில் சுற்றுச்சுவர் சேதம்

அரசுப்பள்ளியில் சுற்றுச்சுவர் சேதம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே அலங்கானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளது. அலங்கானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலங்கானுார், பொசுக்குடி, பொசுகுடிபட்டி அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அதன் பிறகு முறையாக மராமத்து செய்யப்படாததால் ஆங்காங்கே விரிசலடைந்து கிடந்தது. தற்போது 5க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து திறந்த வெளியாக உள்ளது. இதனால் பள்ளி நேரத்தில் கால்நடைகள் உலாவரும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி முழுவதும் சுற்றுச்சுவரை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை