மேலும் செய்திகள்
இன்று பொது வினியோக குறைதீர்க்கும் முகாம்
09-Aug-2025
திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடை களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. திருவாடானை அருகே சின்னக்கீரமங் கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இவை பசுமாடுகள் பால் கரக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அவிழ்த்து விடப்பட்டு சாலையில் திரிகின்றன. சின்னக்கீரமங்கலம் நான்கு ரோடு சந்திக்கும் இடமாக உள்ளது. திருச்சி-ராமேஸ்வரம், மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியாக இருப்பதால் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இது குறித்து சின்னக்கீரமங்கலம் ஹரிகரன் கூறியதாவது: வாகனங்கள் செல்லும் போது திடீரென மிரண்டு ஓடும் கால்நடைகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைத்து மாட்டின் உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
09-Aug-2025