உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அவதுாறு பேச்சு புகார்

அவதுாறு பேச்சு புகார்

ராமநாதபுரம் : புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவரும் கிருஷ்ணசாமியின் மகனுமான ஷியாம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட தலைவர் சசிக்குமார் கூறியதாவது: அண்மையில் திருநெல்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் அவதுாறாக பேசியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ பரவுகிறது. கலவரத்தை துாண்டும் வகையில் பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை