உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பத்திரப்பதிவுக்கு தாமதம் சார்பதிவாளர்  அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

பத்திரப்பதிவுக்கு தாமதம் சார்பதிவாளர்  அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் வெளிபட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு தாமதம் செய்ததால் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் வெளிபட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுகளை சார்பதிவாளர் தாமதம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று பகல் 2:45 மணிக்கு பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.ஒரு நாளைக்கு 60 முதல் 70 பத்திரங்கள் பதிவு செய்த அலுவலகத்தில் காலையில் இருந்து 2 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பத்திரம் பதிவு செய்ய வெளியூர்களில் இருந்து வந்தவர்கள்பத்திரப் பதிவுக்காக பல நாட்கள் ஆவதால் வேறு வழியின்றிராமநாதபுரத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படியேதாமதம் ஆனாலும் பத்திரப்பதிவு முடிக்காமல் இழுத்தடிப்புசெய்வதாக பத்திரப்பதிவு அலுவலர் கண்ணகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கிருந்த அலுவலர்கள் போராட்டம் நடத்தியவர்களிடம் சமரசம் செய்துமீண்டும் 3:00 மணிக்கு பத்திரப்பதிவை துவக்கினர்.ஏற்கனவே இதே சார்பதிவாளர் பத்திரப்பதிவுக்கு தாமதம் செய்வதாக இரு மாதங்களுக்கு முன்பு பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுதாமதத்தால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி