உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முன்னாள் படைவீரர் வாரிசுகள் கல்வி உதவிதொகை பெறலாம்

 முன்னாள் படைவீரர் வாரிசுகள் கல்வி உதவிதொகை பெறலாம்

ராமநாதபுரம்: முதலாம் ஆண்டு தொழிற்கல்வியில் சேர்ந்து உள்ள முன்னாள் படை வீரர் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 2025--26-ம் கல்வியாண்டில் தொழிற்கல்வி யில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர் களின் மகன், மகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மத்திய முப்படை வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.ksb.gov.inஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க டிச.,31 கடைசி நாள். தொழிற்கல்வியில் மகன், மகளை 2025-26-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்த்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிகளவில் இவ்வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது 04567--230 045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்