மேலும் செய்திகள்
வளர்பிறை பஞ்சமி பூஜை
06-Mar-2025
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் இருந்து கிழக்கு ரத வீதி வழியாக உள்ள பிரதான சாலையில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.பக்தர்கள் கூறியதாவது:பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு வரும் வழியில் அதிகளவு ஆக்கிரமிப்பு தின்பண்ட கடைகள், பூக்கடைகள், யாசகம் பெறுவோர்களால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.பக்தர்களின் நலன் கருதி பிரதான பாதையை மறைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க கூடாது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்கள் போக்குவரத்து இடையூறால் அவதிப்படுகின்றனர். தன்னார்வ அமைப்புகளின் பெயரைக் கூறி அப்பகுதியில் பக்தர்களிடம் அடிக்கடி வசூல் செய்து தொல்லை தரும் போக்கும் அதிகரித்துள்ளது. எனவே உத்தரகோசமங்கை போலீசார் பிரதான சாலையில் இடையூறாக இருப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
06-Mar-2025