உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சைக்கிளில் யாத்திரை சென்ற பக்தர்கள்

சைக்கிளில் யாத்திரை சென்ற பக்தர்கள்

முதுகுளத்துார்: பரமக்குடியில் இருந்து முதுகுளத்துார் வழியாக திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சைக்கிளில் யாத்திரை சென்றனர்.பரமக்குடியில் இருந்து ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் பரமக்குடியில் இருந்து முதுகுளத்துார், சாயல்குடி வழியாக திருச்செந்துாருக்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சைக்கிளில் யாத்திரை சென்றனர்.அப்போது முதுகுளத்துார் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செல்லும் வழியில் பக்தர்களுக்கு பிஸ்கட், இளநீர் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை