உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்ட அளவில் கபடி போட்டி: 24 பள்ளிகள் பங்கேற்றன

மாவட்ட அளவில் கபடி போட்டி: 24 பள்ளிகள் பங்கேற்றன

உத்தரகோசமங்கை: நடப்பு கல்வியாண்டிற்கான மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரண்டு மாதமாக உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. குறு வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். நேற்று பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் 24 பள்ளிகளைச் சேர்ந்த அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கபடி விளையாடினர். வெற்றி பெறும் அணியினர் மாநில அளவிலான போட்டிக்கு வயது பிரிவின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் நடக்கக்கூடிய போட்டியில் பங்கேற்கின்றனர். இறுதிச்சுற்று போட்டியின் துவக்க விழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேணி, உடற்கல்வி இயக்குனர் அபிராமம் அன்சாரி, ஆசிரியர்கள் ஆல்பர்ட், மதியழகன், மண்டபம் ரமேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், மகாலிங்கம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை