உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீபாவளி: ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தீபாவளி: ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று தீபாவளி பண்டிகையில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் கோவை, திருப்பூர், சேலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் கோயிலில் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டிகையான நேற்று ராமேஸ்வரம் நகரில் ஓட்டல், டீக்கடைகள், கடைகள் மூடப்பட்டு இருந்ததால் கோயில் நான்கு ரத வீதிகள் உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வெறிச்சோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !