உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடையை மீறி பாம்பனில் பறந்த டிரோன் கேமராக்கள் பறிமுதல்

தடையை மீறி பாம்பனில் பறந்த டிரோன் கேமராக்கள் பறிமுதல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் பறக்க விட்ட இரு டிரோன் கேமராக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரம் கோயில், பாம்பன் ரயில் பாலம், சாலை பாலம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடற்படை கடலோர காவல் படை நிலையங்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ளதால் பாதுகாப்பு கருதி இப்பகுதியில் டிரோன் கேமராக்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனை மீறி மகாராஷ்டிராவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று மதியம் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி இரு டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு பாலம் மற்றும் கடற்கரையில் உள்ள படகுகள், மன்னார் வளைகுடா தீவுகளை வீடியோ எடுத்தனர். இதையறிந்த பாம்பன் போலீசார் இரு டிரோன் கேமராக்களை பறிமுதல் செய்து சுற்றுலா பயணிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை