உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ட்ரோன் பறக்க தடை

ராமநாதபுரத்தில் ட்ரோன் பறக்க தடை

ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி ராமநாதபுரம் நகர் பகுதி களில் நாளையும், நாளை மறுநாளும் (செப்.29, 30) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செப்.,29ல் வருகிறார். அன்றைய தினம் ரோமன் சர்ச் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை நடை பயணமாக ரோடு ேஷா நடத்தி மக்களை சந்திக்க வுள்ளார். மறுநாள் செப்., 30ல் தேவிபட்டிணம் ரோடு பேராவூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். இதனால் செப்.,29, 30 ஆகிய இரு தினங்கள் பார்த்திபனுார் வரவேற்பு இடம், அரசு விருந்தினர் இல்லம், ராமநாதபுரம் நகர் பகுதிகள், பேராவூரில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை