உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரிப்பு

 தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரிப்பு

ராமேஸ்வரம்: தமிழகத்தில் தற்போது போதை கலாசாரம் அதிகரித்து வருவதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் போதை வாலிபரால் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி ஷாலினி வீட்டிற்கு சென்ற பிரேமலதா பெற்றோரிடம் ஆறுதல் கூறினார். அவர் கூறியதாவது: பெண் குழந்தைகளுக்கு சமூக விரோதிகளால் சிறு பிரச்னை ஏற்பட்டாலும் போலீசாரிடம் புகார் செய்து போக்சோ மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவி ஷாலினியை கொன்ற கொலைகாரனுக்கு கடும் தண்டனை தமிழக அரசு வாங்கிக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மது புழக்கத்துடன், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் புழக்கமும் அதிகரித்துள்ளது. போதை கலாசாரம் பெருகி உள்ளதால் எதிர்காலத்தில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். போலீசார் தடுக்காமல் பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழர் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இது குறித்து பிரதமர் மோடியிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார். முன்னதாக ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம், கோயிலில் 22 தீர்த்தங்களில் பிரேமலதா புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ