உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிழக்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை

கிழக்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை

ஆர்.எஸ்.மங்கலம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று(ஜன.20) வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கிழக்கு கடற்கரை பகுதிகளான ஆற்றங்கரை, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, காரங்காடு, தொண்டி உட்பட கிழக்கு கடற்கரையோர மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் ஏராளமான நாட்டு படகுகளும், விசைப்படகுகளும் நேற்று காலை முதல் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ராமேஸ்வரம் பயணத்தை முடித்துவிட்டு சென்ற பிறகே முறையான அறிவிப்புக்கு பிறகு கடலுக்கு செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி