உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வெவ்வேறு இடங்களில் மின் விபத்து; 4 பேர் சாவு

 வெவ்வேறு இடங்களில் மின் விபத்து; 4 பேர் சாவு

- நமது நிருபர் குழு - வெவ்வேறு இடங்களில் நடந்த மின் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி தி.மு.க., துணைத்தலைவர் அழகுராணி கணவர் ராஜேந்திரன், 52; தி.மு.க., பிரமுகரான இவர் புதுக்குடியில் உள்ள இவர்களுக்கு சொந்தமான வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். நேற்று வீடு சுற்றுச்சுவர் கம்பி கதவை ராஜேந்திரன் திறந்த போது, மழையால் மின் கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் பாய்ந்து இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், போடி, போஜப்பன் நகர் தேவர் காலனி ஜெயபாண்டி, 44; ஊழியர். இவரது புதிய வீடு புதுமனை புகுவிழா நேற்று நடந்தது. ராமையா, 60, தன் பசுவை ஜெயபாண்டியின் வீடு கிரஹபிரவேஷத்துக்காக அழைத்து வந்த போது, பசு மிரண்டு ஓடியது. அதை பிடிக்க முயன்ற ராமையா மின் மீட்டர் பெட்டியில் கை வைத்தார். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்துார், அ.ராமலிங்கபுரத்தை சேர்ந்த கொத்தனார் சக்திவேல் மகன் வினோத்குமார், ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் வினோத்குமார், நண்பர்கள் ஜெகன், கவின் ஆகியோருடன் விளையாட சென்றார். பழைய கழிப்பறை சுவர் மீது ஏறிய வினோத் குமார், கையை உயர்த்திய போது உயரழுத்த மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து இறந்தார். திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் ஜேசு ராஜன் குரூஸ், 34. அவரது நண்பர் ரெனால்ட், 35. இருவரும் நேற்று முன்தினம் காலை ஸ்ரீவில்லிபுத்துார் மொட்டைமலை அகதிகள் முகாமில் உள்ள ரெனால்டின் அத்தை வீட்டிற்கு வந்தனர். அங்கு வீட்டின் கூரை ஷெட்டை மாற்றி அமைத்த போது, ஒயர் இணைப்பை கழற்றாமல் சுவிட்ச் பாக்சை துாக்கிய போது மின்சாரம் பாய்ந்து ஜேசுராஜன் குரூஸ் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை