உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி

 பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி

ராமநாதபுரம்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் வெளி நாடுகளில் பட்டப்படிப்பு படிக்க அடிப்படை தேவையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 18 முதல் 35 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பிளஸ் 2, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்றரை மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவுத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ