மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
2 minutes ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
3 minutes ago
ராமநாதபுரம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்களில் அபிேஷகம், பூஜைகள் நடந்தன. சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. 2026 ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 12:00 மணியை கடந்தவுடன் கேக் வெட்டி கொண்டாடி மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறினர். ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச், சி.எஸ்.ஐ., ரேமா சரச் ஆகிய சர்ச்களில் அதிகாலை 12:00 மணிக்கு மேல் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏரளமானோர் பங்கேற்றனர். தங்கச்சிமடம் தெரசாள் சர்ச்சில் நடந்த திருப்பலியில் பாதிரியார் ஆரோக்கியராஜா, சிவகங்கை வியான்னி அருட்பணி மையம் இயக்குநர் செபாஸ்டின் உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழி விடுமுருகன் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், குமரய்யா கோயில், ராஜமாரியம்மன் கோயில், ரயில்வே பீடர் ரோடு வெட்டுடையாள் காளியம்மன், கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர் கோயில், மல்லம்மாள் காளியம்மன் கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். *ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயில், திரவுபதி அம்மன் கோயில், அரசாள வந்த அம்மன் கோயில்களில் மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் துாய ஆவியானவர் சர்ச்சில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வட்டார அதிபர் தேவசகாயம் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதே போன்று கொக்கூரணி, செங்குடி, முத்துப்பட்டினம், எட்டியத்திடல், இருதயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி சர்ச்சுகளிலும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்யப்பட்டது. *திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர், திருவாடானை அருகே குளத்துார் குலசேகரபெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் மற்றும் கிராமங்களில் அமைந்துள்ள கோயில்களில் நேற்று ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. * ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் சர்ச், தங்கச்சிமடம் புனித தெரசாள் சர்ச், சூசையப்பர் சர்ச், குழந்தை இயேசு சர்ச், பாம்பன் மாதா சர்ச் ஆகியவற்றில் நடந்த சிறப்பு திருப்பலி பூஜையில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று அருளாசி பெற்றனர்.
2 minutes ago
3 minutes ago