| ADDED : நவ 21, 2025 04:56 AM
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா சபை மற்றும் இந்திய அரசு குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் (எம்.எஸ்.எம்.இ.,), குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் வசதி அலுவலகம் இணைந்து தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் சவுராஷ்ட்ரா சபை கல்விக்குழு பேரவை அரங்கில் நடந்தது. சவுராஷ்டிரா சபை தலைவர் நாகநாதன் தலைமை வகித்தார். சபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எம்.எஸ்.எம்.இ., மதுரை வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் நிலைய உதவி இயக்குனர் ஜெயசெல்வம் வரவேற்றார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் ஜெயகிருஷ்ணன், மீனவர் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம், அலங்காநல்லுார் தொழில் முனைவோர் பாக்கியலட்சுமி, மதுரை கிரசென்ட் இன்னோவேஷன் கவுன்சிலர் சரவண பாண்டியன், மதுரை ஏற்றுமதி இறக்குமதி பயிற்றுனர் செல்வ சுந்தரராஜன், தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனர் மாவட்ட பொறுப்பாளர் பொன்வேல் முருகன் உள்ளிட்டோர் பேசினர். அப்போது கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தொழில் மயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம் அப்பகுதியில் ஏற்றத்தாழ்வுகள் குறைகிறது என்றனர். மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் முனைவோரை ஊக்குவிப்பது, வங்கி நிதி உதவி, திறன் மேம்பாடு, சந்தைகளை அணுகி வியாபாரம் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை விளக்கினர். இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.