உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அழகன்குளத்தில் தொல்லியல் அருங்காட்சியம்  அமையுங்கள்

அழகன்குளத்தில் தொல்லியல் அருங்காட்சியம்  அமையுங்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வந்த முதல்வரிடம் ராமநாத புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் மாவட்ட தலைவர் ஷாஜகான், பொதுச் செயலாளர் ஜெய்னுால் ஆலம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: அழகன்குளத்தில் தொல்லியல் அருங்காட்சி யம் அமைக்க 2020ல் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மண்டபத்தில் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அகழாய்வு நடந்த பகுதியில் அருங்காட்சியம் அமைக்க வேண்டும். சுன்னத் ஜமாத் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களின் உடல்களை மட்டும் பள்ளிவாசலில் அடக்கம் செய்ய அனுமதிக்குபடி புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழக வக்ப் வாரியத்தை புதுப்பித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கான விதிகள் பழைய பள்ளிவாசல்களை புதுப்பிக்கும் பணிக்கு பொருந்தா மல் உள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை