மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
10 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
11 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
11 hour(s) ago
சிக்கல்: -சிக்கல் அருகே ஆய்க்குடி கிராமத்தில் ஆர்.ஓ., பிளான்ட் காட்சிப்பொருளானதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.சிறைக்குளம் ஊராட்சி ஆய்க்குடியில் 2017-18ல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்(ஆர்.ஓ., பிளான்ட்) அமைக்கப்பட்டது. ரூ.14.97 லட்சத்தில் சென்னை தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்ட நாள் முதல் முறையாக பயன் தராததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். ஆர்.ஓ., பிளான்ட் பழுது நீக்கம் செய்யப்படாததால் பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.ஆழ்துளை கிணற்றில் நீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் இல்லாமல் மவுனம் சாதிக்கிறது. எனவே பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் ஆர்.ஓ., பிளான்ட் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago