உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தி.மு.க., அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

ராமநாதபுரம் : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்தும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க வலியுறுத்தியும் இன்று (பிப்.,13ல்) 18 மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது.தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் தமிழக தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதியில் ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்கப்படும் என அறிவித்தனர். அதனை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம், கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.இவற்றை தமிழக அரசு கண்டு கொள்ளாதால் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி உட்பட 18 மாவட்டங்களில் இன்று மறியல் போராட்டம் நடக்கிறது.விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் செயலாளர் நேதாஜி கூறுகையில்,வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பதை நிறுத்திவிட்டு, நமது நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் விற்க வலியுறுத்தி போராடுகிறோம் என்றார்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்