உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தொடர் மழையால் மீண்டும் நாற்று நடும் விவசாயிகள்

 தொடர் மழையால் மீண்டும் நாற்று நடும் விவசாயிகள்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில் மீண்டும் விவசாயிகள் நாற்று நடுகின்றனர். விவசாயிகள் கூறிய தாவது: வண்ணாங்குண்டு, அய்யனார்புரம், மேதலோடை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான விவசாய நிலங்களில் அதிகளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த வயல்களில் பயிர்கள் மீண்டும் முளைப்பதற்கு வாய்ப்பு இல்லாததால் ஓரிடத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் நாற்றுகளை தண்ணீரில் உள்ள ஈரப்பதத்துடன் அவற்றை மீண்டும் நடவு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஜோதி மட்டை, சித்திரை கார் உள்ளிட்ட நெல் தற்போது சாகுபடி செய்யப்படுகிறது. மேடான பகுதிகளில் தண்ணீர் வழிந்தோடி பள்ளமான இடத்தை நோக்கி அதிகளவு தேங்கி வருவதால் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி