மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
சிக்கல்: சிக்கல் அருகே கொத்தங்குளம் ஊராட்சி சேரந்தை கிராமத்தில் செம்புலிங்க அய்யனார் கோயில் செல்லும் பிரதான சாலை சேதமடைந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.டிச.20ல் பெய்த தொடர் கன மழையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பாதை துண்டிக்கப்பட்டு பெரிய பள்ளத்தாக்கு போல காணப்படுகிறது. சேரந்தையை சேர்ந்த பா.ஜ., விவசாய அணி நிர்வாகி கோவிந்தன் கூறியதாவது:சேரந்தை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையாகவும், செம்புலிங்க அய்யனார் கோயில் செல்லும் வழியாகவும் உள்ள இடத்தில் 20 அடி நீளத்திற்கு மெகா பள்ளம் உருவாகியுள்ளது. மழை நீர் முழுவதுமாக வடிந்த நிலையில் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் டூ வீலரில் செல்ல வழி முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே மழை வெள்ள பாதிப்பால் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் முறையான வடிகால் வரத்து கால்வாய் பாலம் அமைக்கவும் கடலாடி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கும் மனு அளித்துள்ளேன் என்றார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago