மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கனமழை
11-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலம்,: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.நெற்பயிர்கள் முளைத்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பாரனுார், ஊராணங்குடி, உப்பூர், வளமாவூர், கொத்தியார்கோட்டை, சித்துார் வாடி, வெட்டுக்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில் போதிய தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் உரமிடும் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியாமலும், நெற்பயிர்களுக்கு இடையூறாக உள்ள களைகளை பறிப்பதற்கும் தண்ணீரின்றி கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். முழுமையான விவசாய பணி மேற்கொள்வதற்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
11-Oct-2024