மழையால் பசுமையான வயல்கள்
திருவாடானை: திருவாடானை பகுதியில் தொடர் மழையால் வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.திருவாடானை தாலுகாவில் மழை அதிகமாக பெய்ததால் விதைகள் முளைப்பு தன்மையை இழந்தது.இதனால் மறு விதைப்பு பணியில் ஈடுபட்டோம். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பயிர்கள் வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம் சனவேலி, ஆப்பிராய், முகிழ்த்தகம் போன்ற பல்வேறு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அப்பகுதியில் பயிர்கள் வளர்ச்சியில்லாமல் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.