உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூன் மாத வாகன சோதனையில் ரூ.6.48 லட்சம் அபராதம் விதிப்பு 

ஜூன் மாத வாகன சோதனையில் ரூ.6.48 லட்சம் அபராதம் விதிப்பு 

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் மாதம் 923 வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 194 வாகனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ரூ.6.48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் தலைமையிலான வாகன ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் 923 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள், மினி சரக்கு வாகனங்கள், சுற்றுலா, மினி பஸ் போன்ற வாகனங்கள் சோதனையிடப்பட்டன.இதில் 45 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன. 194 வாகனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. ரூ.2.74 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டன. ரூ.3.73 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆட்களை அதிகமாக ஏற்றி சென்ற 20 வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி சென்ற 17 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 34 வாகனங்கள், அதிக வேகத்தில் இயக்கப்பட்ட 11 வாகனங்கள், வாகனம் ஓட்டும் போது அலைபேசி பயன்படுத்திய 16 வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடர்ந்து வாகன சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ