மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
ராமநாதபுரம்: தென் மாவட்டங்களில் பணிபுரியும் தீயணைப்புத்துறையினருக்கான விளையாட்டுப்போட்டிகள் ராமநாதபுரத்தில் நடக்கிறது.டி.ஐ.ஜி., துரை நேற்று போட்டிகளை துவங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் தென் மண்டல தீயணைப்புத்துறை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பங்கேற்கின்றனர். விளையாட்டு போட்டிகளுக்கு தீயணைப்புத்துறை இணை இயக்குநர் விஜயக்குமார் தலைமை வகித்தார்.ராமநாதபுரம் டி.ஐ.ஜி., துரை போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் துறை ரீதியான விளையாட்டுகளான கயிறு ஏறுதல், ஏணிப்பயிற்சி, அணிப்பயிற்சி, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, நீச்சல், ஓட்டம், ஈட்டி, குண்டு எறிதல் நீளம் தாண்டுதல், உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் முதல் இரு இடங்களைப்பெறும் நபர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ் செய்திருந்தார்.-------- போட்டி இன்று நிறைவடைகிறது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago