உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பண்ணைகுட்டைகளில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் : விவசாயிகள் மகிழ்ச்சி

 பண்ணைகுட்டைகளில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் : விவசாயிகள் மகிழ்ச்சி

கடலாடி: கடலாடி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் பண்ணை குட்டைகளில் வளர்ப்புக்காக மீன் குஞ்சுகள் விடுதல் மற்றும் அதன் வளர்ப்பு குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. சிக்கல் அருகே உள்ள கீழச்சிறுபோது கிராமத்தில் விவசாயிகளின் வயலில் உள்ள பண்ணை குட்டையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் பங்கேற்று நன்னீர் மீன் வளர்ப்புகளான கட்லா, ரோகு, விரால், கெண்டை ஆகிய மீன்கள் வளர்ப்பதின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என விளக்கினார். மீன்கள் வளர்ப்பு முறைகள் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது. அப்பகுதியில் உள்ள ஏராளமான பண்ணை குட்டைகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் பெருவாரியான பண்ணை குட்டைகள் நிரம்பியுள்ள நிலையில் மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கு சாதகமாக உள்ளது. பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்