வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தவறு. 93 கோடியில் 40 பர்சண்ட் நிதி 37 கோடி முழுமையாக பயன்படுத்தப் பட்டது.
மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் தீபாவளி விற்பனை ஜோர்
20-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ. 93 லட்சத்தில் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாத நிலையில் பராமரிப்பின்றி கட்டடம் சேதமடைந்துள்ளது. கதவுகள் திறந்து கிடப்பதால் மது அருந்தும் இடமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், முந்தல், தொண்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மீன்கள் ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. ராமநாதபுரத்தில் சாலைத்தெரு, பாரதி நகர் பகுதிகளில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. சாலைத்தெரு மீன் மார்க்கெட்டில் அருகில் காய்கறி மார்க்கெட்டும் செயல்படுவதால் மக்கள் கூட்டம் மிகுதியாக காணப்படும். இது தனியார் இடம் என்பதால் வாடகை உள்ளிட்டவைகள் அதிகம். அதுவும் இல்லாமல் மக்கள் தங்களது வாகனங்களை மார்க்கெட்டிற்கு வெளியே நிறுத்துவதால் வாகன போக்குவரத்தும் இந்த பகுதியில் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க நகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.93.39 லட்சத்தில் புதிய மீன் மார்க்கெட் 2022ல் 54 கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மீன்களை பாதுகாக்க குளிர்சாதன அறை என நவீன முறையில் அமைக்கப்பட்டது. அதன் பிறகு மீன் விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் திறக்கப்பட்ட சில மாதங்களில் மூடப்பட்டு தற்போது வரை செயல்படவில்லை. மேலும் கட்டடத்தில் தொடர் பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. கதவுகள் திறந்து கிடப்பதால் குப்பை கொட்டும் இடமாகவும், இரவில் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அரசு நிதி ரூ.93 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் மீன் மார்க்கெட்டை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
தவறு. 93 கோடியில் 40 பர்சண்ட் நிதி 37 கோடி முழுமையாக பயன்படுத்தப் பட்டது.
20-Oct-2025