உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆக.18 ல் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றம்: விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஆக.18 ல் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றம்: விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.18 ல் கொடியேற்றத்துடன் துவங்குவதால் விழா ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் மீது பகல் நேரங்களில் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். சீதையை மீட்பதற்காக ராமபிரான் இலங்கை செல்வதற்கு முன் இக்கோயில் மூலவரை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து சென்றதாக கூறப்படுவதால் மேலும் சிறப்பு பெற்று விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆக,18 ல் காலை 9:30 மணிக்கு சதுர்த்தி விழா கொடியேற்றம் நடக்கிறது. விழாவின் தொடர்ச்சியாக, தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று விழாவில் எட்டாம் நாளான ஆக.,25 ல், சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் தேரோட்டம் நடைபெறும். ஆக.,27 ல் சதுர்த்தி தீர்த்த வாரியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை