உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியம்மன் கோயிலில் பங்குனி  பூக்குழி திருவிழா கொடியேற்றம்

மாரியம்மன் கோயிலில் பங்குனி  பூக்குழி திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம், - ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயிலில் பங்குனி பவுர்ணமி பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.ராமாதபுரம் சமஸ்தானம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 14 முதல் 24 வரை பங்குனி பவுர்ணமி பூக்குழி திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை மாரியம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் காப்புக்கட்டுதல் நடந்தது. காலை 11:00 மணிக்கு உற்ஸவருக்கு வெள்ளிக்கவச அலங்காரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 24ல் பங்குனி பவுர்ணமியில் காலை 11:15 மணிக்கு பூ வளர்த்தல், அன்று இரவு 10:00 மணிக்கு பூக்குழி இறங்குதலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ