உள்ளூர் செய்திகள்

 கொடி அணிவகுப்பு

பரமக்குடி: பரமக்குடி(தனி) சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடக்கிறது. இதன்படி பரமக்குடி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுத்தனர். இதே போல் நேற்று காலை எமனேஸ்வரம் வைகை நகர் துவங்கி இளையான்குடி ரோடு வழியாக நகர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி