மேலும் செய்திகள்
வேலைவாய்ப்பு முகாமில் 576 பேர் பணி நியமனம்
30-Sep-2024
ராமநாதபுரம் : நேருயுவகேந்திரா சார்பில் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரியில் நடந்த மாவட்ட அளவிலான கலைப்போட்டியில் நாட்டுப்புற கலைப்பயிற்சி மைய மாணவர்கள் வெற்றி பெற்றனர்.கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரியில் நேரு யுவகேந்திரா சார்பில் நாட்டுப்புற கலைகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம் நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தினை சேர்ந்த மாணவர்கள் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், புலியாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் செய்தனர். இதில் ராமநாதபுரம் நாட்டுப்புற கலை மையத்தினை சேர்ந்த 16 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் முதல் பரிசான ரூ.7000 சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அனைவரையும் நாட்டுப்புற கலைப்பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் லோகசுப்பிரமணியன் பாராட்டினார்.
30-Sep-2024