மேலும் செய்திகள்
கொடிமரம் நடும் விழா
20-Jan-2025
கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயில் 48 வது மாசிக் களரி விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது. இதற்கு முன்னதாக கோட்டை முனீஸ்வரர் சாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உட்பட பூஜை பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. கோயில் முன்பு முகூர்த்த காலுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டு நடப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.பிப்.26ல் பால்குடம், பொங்கல் வைத்தல், பிப்.27ல் பூச்சொரிதல், சிறப்பு அபிஷேகம், பிப்.28 ல் விளக்கு பூஜை நடக்கிறது. தினந்தோறும் சிறப்பு பூஜை நடைபெறும்.
20-Jan-2025