உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வீடு தேடி இலவச மருத்துவ ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் 

 வீடு தேடி இலவச மருத்துவ ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு சார்பில், இலவச மருத்துவ சேவைக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பெருங்குளம் செஞ்சிலுவை சங்கத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் வீடு இலவச மருத்துவ ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. ராமநாதபுரம், சிவகங்கை தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை அலுவல் சாரா நிர்வாக இயக்குநர் நாராயணன் திருப்பதி துவக்கி வைத்தார். வாகனத்தில் தலா ஒரு டாக்டர், செவிலியர், ஓட்டுநர் இருப்பர். தினமும் ஆம்புலன்ஸ் மூலம் வீடுகளுக்கு சென்று முறையான மருத்துவ சேவை கிடைக்க ஏற்பாடு செய்வர். ஏற்கனவே கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருச்சி, நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், அமைப்பாளர் தாரா ரமேஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ரமேஷ் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை