உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விடுதலையான மீனவர்கள் தமிழகம் வந்தனர்

விடுதலையான மீனவர்கள் தமிழகம் வந்தனர்

ராமேஸ்வரம்:இலங்கையில் விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர்.ராமேஸ்வரத்தில் இருந்து டிச.6ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒரு விசைப்படகில் இருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இவர்களை டிச.20ல் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.இதையடுத்து கொழும்பு அருகே மெரிகானா முகாமில் போலீசார் தங்க வைத்தனர். இந்நிலையில் மீனவர்கள் 8 பேரும் நேற்று மதியம் கொழும்பில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு சென்னை வந்திறங்கினர். இவர்களை ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் வரவேற்று இரவு ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை