ஜெலட்டின் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
திருவாடானை; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மீனவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான தஞ்சாவூர் மாவட்டம் காரங்குடாவைச் சேர்ந்த முத்தரசனை போலீசார் கைது செய்தனர்.தொண்டி அருகே வட்டக்கேனியில் 2016 ல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சாக்கு பையுடன் நின்ற 3 பேரை போலீசார் சோதனையிட்டனர். 200க்கும் மேற்பட்ட ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் ஒயர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கடலுக்கு சென்று வெடி வைத்து மீன் பிடிக்க தயார் நிலையில் இருந்த தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த கார்மேகம், துரைபாண்டி, இவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா காரங்குடா முத்தரசன் 45, ஆகியோரை போலீசார் கைது செய்து திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கு விசாரணை நடந்த நிலையில் ஜாமினில் சென்ற முத்தரசன் 3 ஆண்டுகளாக ஆஜராகவில்லை. நீதிபதி மனிஷ்குார் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து முத்தரசனை போலீசார் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.